இந்தியாவில் ஆதார் அட்டை முக்கியமான அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குவது, கல்வி நிறுவனங்களில் சேர்வது மற்றும் அரசின் திட்டங்களைப் பெறுவது முதல் அத்தியாவசிய ஆவணம்.
தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ₹10,000 அபராதம் விதிக்கப்படும்.
UIDAI இணையதளம் மூலம் ஆதார் அட்டை உண்மையானதா என்பதை எளிதாகச் சரிபார்க்கலாம். இணையதளத்தில் “ஒரு ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். இதன் மூலம், உங்கள் ஆதார் எண் சரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த சோதனையை செய்வது முக்கியம். சரிபார்க்கப்படாத அல்லது போலி ஆதார் அட்டைகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும், மேலும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம்.