தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் சுப்ரமணியன் நகர் பகுதியில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.
இதில் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வக்குமார், ஊராட்சித் தலைவர் அ.உதயகுமார், வள்ளியம்மை பாஸ்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செளமியா ஜனார்த்தனன், ரதிஉஷாசெந்தில், ஊராட்சி துணைத் தலைவர்கள் ஜெயந்தி சதானந்தம், சிங்.சரவணன், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர் முரளி, நீலகிரி மின்பொறியாளர், உதவி மின்பொறியாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனந்தசேகரன், தேவிகாசக்திவேல், ஊராட்சி செயலர் சக்திவேல், அப்பகுதியில் வசிக்கும் நலச்சங்க நிர்வாகிகள், திருவள்ளுவர் நகர் நலச்சங்க நிர்வாகிகள், மின் பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.