திருவள்ளூர்: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 14) முதல் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சராசரியாக 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் பலத்த மழையும், ஜமீன் கொரட்டூரில் லேசான மழையும், தாமரைப்பாக்கம், பூண்டி, திருவள்ளூர், செங்குன்றம் போன்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழையாலும் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு வினாடிக்கு 257 கன அடியும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 240 கன அடியும், சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 160 கன அடியும், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரிக்கு வினாடிக்கு 60 கன அடியும், 45 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்குள் வினாடிக்கு. 11,757 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த 5 ஏரிகளிலும் தற்போதைய நீர் இருப்பு 3,971 மில்லியன் கன அடியாக இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.