
பென்னாகரம்: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு, 43 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 33 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கும், படகில் பயணம் செய்வதற்கும் விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக நீடித்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 29,021 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 32,240 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,300 கன அடி திறந்து விடப்படுகிறது. திறப்பை விட வரத்து அதிகரிப்பால், நேற்று முன்தினம் காலை, 111.39 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை, 113.21 அடியாக உயர்ந்தது.

அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.72 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.05 டிஎம்சி. நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.