தென்காசி : மழையால் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் சீராக இல்லாமல் அவ்வப்போது மாறி வருகிறது.
கடந்த 2 நாட்களாக அருவியில் தண்ணீர் படிப்படியாக சரிந்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
நேற்று இரவு முதல் பிரதான அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தர்வி, பழைய குற்றால அருவி, புலி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் குளிக்க நீண்ட தூரத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.