சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை கண்காணிக்க ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பட்டியலில் தற்போது திருத்தப்பட்ட பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, கடந்த மாதம், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் மதுமதி, அதிகாரிகளை நியமித்தார்.
அதன்படி, 38 மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், காஞ்சிபுரம் மாவட்ட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் கண்ணப்பன், திருவள்ளூர் மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குநர் உமா, திருவள்ளூர் மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குநர் சென்னை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மாதம் ஒருமுறையாவது அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று நலப்பணிகளை ஆய்வு செய்து பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.