டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவர் சந்தித்து பேசினார். துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை, புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்க ரவி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.