மதுரை: சென்னை புழல் சிறையில் உள்ள ரவுடி வெள்ளைக்காளி எனப்படும் காளிமுத்து மீது எப்போது என்கவுண்டர் நடைபெறும் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. அவரது சகோதரி, “என் சகோதரர் மீது பொய்யான வழக்குகள் பதிந்து, போலீஸார் என்கவுண்டர் செய்யும் சூழல் உருவாக்கப்படுகின்றது” எனக் கூறி, விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த கோரிக்கை மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், கடந்த மாதம் மதுரையில் ரவுடி கிளாமர் காளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சகோதரருக்கு சம்பந்தமில்லை என்றும், எப்படியும் என்கவுண்டர் செய்யும் நோக்கில் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் அடிப்படையில் நீதிபதி தனபால், சமீபகாலமாக என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகக் குறிப்பிட்டார். “எத்தனை என்கவுண்டர்கள் நிகழ்ந்துள்ளன? போலீசார் சட்டத்தை மீறி செயல் படுகின்றனர். துப்பாக்கி பாதுகாப்புக்காக மட்டுமே” என்றார்.
அரசுத் தரப்பில், “இருவர் போலீசாரை ரவுடிகள் கொலை செய்துள்ளனர்” என்ற தகவல் அளிக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.