கரூர்: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கவின் என்ற 34 வயது நபர் உயிரிழந்துள்ளார். கூட்டநெரிசல் சம்பவத்தில் ஏற்கனவே 39 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.