நீலகிரி: நீலகிரியில் வாகன சோதனைக்காக போலீசார் நிறுத்த போது நிற்காமல் சென்ற கேரளா சுற்றுலா பயணிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பிளாஸ்டிக் பாட்டில்களுடன் வந்த கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், சோதனையின்போது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் வாகன சோதனையில் நிற்காமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.