சென்னை: எக்ஸ் இணையதளத்தில் அவர் மேலும் கூறியதாவது:- “மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, பேசி முடித்ததும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று மூன்று முறை கூச்சலிட்டு மாணவர்களை கட்டாயப்படுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்பில் இருக்கும் ஒருவர், மதச்சார்பின்மை என்ற அடிப்படைக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறார்; அவரது அதிகார வரம்புக்கு அப்பால் செயல்படுகிறார்; சரியான நேரத்தில் தனது கடமையைச் செய்யத் தவறியவர்; மேலும் மாணவர்களிடையே மதவெறியை தூண்ட முயற்சிக்கும் இந்துத்துவா வெறியர்.

உச்ச நீதிமன்றத்தின் அடி வாங்கிய பிறகும், தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளின் அடிப்படையில் தனது விருப்பு வெறுப்புகளை நடைமுறைப்படுத்த ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி வருகிறார். தமிழக அரசின் உயர்கல்வித்துறை மாணவர்களிடையே மதவெறியை தூண்டி சமூக நீதிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அவருக்கும் கல்வித் துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்துள்ளது.
இது முடிந்த பிறகும், அவரை அழைத்து நிகழ்வை நடத்துபவர் யார் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும். இத்தகைய மதவெறியரை ஆளுநர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல் தமிழக மாணவர்களும் பொதுமக்களும் ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது என்பதை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.