சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர், தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அலுவலகம் செல்பவர்கள் மறக்காமல் குடை எடுத்து செல்லுங்கள்.
தமிழகத்தில் மழை பெய்யும் சூழல்
தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்றும் நாளையும் 16.07.2024 மழை பெய்யும். வேகத்தில் மாற்றம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும்.
20 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும்.
சென்னை புறநகர் வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 34° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸாகவும் இருக்கும்.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள்:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கரையோரங்களில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதுடன் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்காள விரிகுடா பகுதிகள்:
15,07,2024; மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.