ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டைப் போல், சோதனைச் சாவடிக்கு வந்து இ-பாஸ் பெறுவதை தவிர்க்க வேண்டும். கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் வாகனங்களுக்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் ஆட்சியரின் இந்த உத்தரவு.

கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.