திருமங்ககலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கணவர் மூலமாக லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கணவர் மூலமாக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
நிலத்தை அளந்து பட்டா வழங்க விண்ணப்பித்திருந்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த அஜித்குமாரிடம் நில அளவையர் சித்ராதேவி லஞ்சம் கேட்டதோடு அந்த பணத்தை வேறு இடத்தில் உள்ள தனது கணவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அஜித்குமார் அளித்த புகாரில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார், பணத்தை பெற்றுக் கொண்டு தப்பியோடிய சித்ராதேவியின் கணவர் கணபதிவேலை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.