திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்ததால் மண் சரிவு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த முறை பெஞ்சல் புயலின் தாக்கத்தால் தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது.
கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் ஒரே வீட்டில் ஏழு பேர் சிக்கிக் கொண்டனர் அவர்களுடைய நிலை என்ன என தெரியாமல் இரண்டு நாட்களுக்கும் மேலாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஒவ்வொரு சடலமாக மீட்கப்பட்டது திருவண்ணாமலையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு ஏழு பேரின் சடலமும் மீட்கப்பட்ட நிலையில் ஐஐடி பேராசிரியர் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர் அவர்கள் கூறுகையில் தொடர்ந்து மழை நீடித்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.