கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் ஏரிக்கரையில் சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை ரசிக்கின்றனர்.

தற்போது, நகரில் கோடை காலம் நெருங்கி வருவதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் நட்சத்திர ஏரியில் இரவில் லேசர் லைட் ஷோ அமைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் 10 நாட்களுக்கு ஏரியில் லேசர் ஷோ நடைபெறும்.