வழக்குகளை மாற்றுவது தொடர்பான தகராறில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதலில் 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டதாகவும், அவர்கள் 2 தரப்பினராக பிரிந்து மோதிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சட்டத்தரணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வழக்கறிஞர்களும் ஒருவரையொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டதாகவும் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மோதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காரணமாக இரு நீதிமன்றங்களிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.