சென்னை: இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் நான் ஸ்டிக் பொருட்களை எப்படி பராமரிப்பது என்று தெரியுங்களா?
- இப்ோது நான் ஸ்டிக் பாத்திரங்கள் உப ோகம் அதிகம். இது உலோகத்தினால் தயாரிக்கப்படுகிறது. இந்த பாத்திரங்கள் பார்க்க வளவளப்பாக இருக்கும். இதில் உணவு பொருள்கள் ஒட்டாமல் இருக்க டெஃப்ளான் பூச்சு சேர்க்கப்படு கிறது.
2,அடுப்பை அதிகப்படியான தீயில் வைத்து சமைக்கும் போது இந்த பாத்திரத்தை அப்படியே சில நிமிடங்கள் வைத்தாலும் கூட அதிலிருந்து PFOA ( Perfluorooctanoic acid) என்னும் நச்சு பொருள் வெளியேறும்.
- நான்ஸ்டிக் தவா, வாணலி, பாத்திரம் இப்படி எதுவாக இருந்தாலும் சமைக்கும் போது முதலில் தீயை அதிகம் வைக்காதீங்க.
- வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்திருக்க வேண்டாம். உணவு பொருளை கிளறுவதற்கு சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சில்வர் கரண்டிகள் தவிர்க்க வேண்டும். இவை வேகமாக கிளறும் போது அந்த பாத்திரங்களில் கீறல்களை உண்டாக்கி விடும்.
- நான்ஸ்டிக் பாத்திரத்தை சுத்தம் செய்யும் போதும் கூடுதல் கவனம் தேவை. இந்த வகையான பாத்தி ரங்களை சுத்தம் செய்வது மிக எளிது. அதே நேரம் ஸ்கரப் போன்று கடுமையான பாத் திரம் தேய்க்கும் தூளை பயன்படுத்த கூடாது.
- நான்ஸ்டிக் பாத்திரத்தை அவ்வபோது கவனியுங்கள். அதன் ஓரத்தில் விளிம்பில் சற்று கீறல்கள் தென்பட்டாலே அந்த பாத்திரத்தை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- புதியதாக வாங்கிய நான்-ஸ்டிக் பாத்திரங்களை டிஷ் வாஸ் லிக்விடால் கழுவித் துடைத்துவிட்டு பயன்படுத்தவும்.
- ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்பும் கழுவிய பின்பு மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது டிஷ்யூ கொண்டு துடைத்து வையுங்கள். நான் ஸ்டிக் பாத்திரம் சூடாக இருக்கும் போதே தண்ணீரில் கழுவக்கூடாது.
- நான்-ஸ்டிக் தவாவில் குறைந்த அளவில் எண்ணெய் பயன்படுத்தலாம். வடை, பூரி போன்றவற்றை பொறிக்க இந்த பாத்திரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
- நான்-ஸ்டிக் பாத்திரங்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்க வேண்டும். கூர்மையான விளிம்புகள் கொண்ட பாத்திரங்களுக்கு இடையில் வைக்கக் கூடாது. சமையலறையில் அதை தனி இடங்களில் வையுங்கள்.