சென்னை: பவர் பத்திரம் இரண்டு வகைப்படும். நிலம் வாங்கும் போது பவர் பத்திரம் இருந்தால் அதை சரியான முறையில் பார்த்து வாங்க வேண்டும். பவர் பத்திரத்தின் அதிகாரம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
- பவர் பத்திரம் இரண்டு வகைப்படும். இதை சரியான முறையில் சரிபார்க்கணும்.
- முதல் பொது பவர் பத்திரம் (General Power Bond). இதன் மூலம் அதிகாரம் பெறுபவருக்கு வீடு போன்ற சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைகளாகப் பிரிக்க அதிகாரம் கிடைக்கும்.
- பொது பவர் பத்திரம் மூலம் அரசு அலுவலகங்களில் சொத்து தொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இடவும் முடியும்.
- இரண்டாவது வகை தனி பவர் பத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
- தனி பவர் பத்திரம் அளிக்கப்படும் நபருக்குக் குறிப்பிட்ட அதிகாரம் மட்டும் அளிக்கப்படும்.
- தனி பவர் பத்திரம் (Power bond) பெற்றவர் சொத்தை விற்பதற்கு அல்லது மனைகளாகப் பிரிப்பதற்கு எனச் சில அதிகாரம் மட்டும்தான் கிடைக்கும்.
- நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தை நிர்வகிக்க, விற்பதற்கான அதிகாரத்தை ஒருவருக்கு வழங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் பத்திரம் பதிவுசெய்ய வேண்டும்.
- பவர் பத்திரம் அளிப்பவர் உயிருடன் இருந்தால்தான் பத்திரம் செல்லுபடியாகும்.
- பொது பவர் பத்திரம் (General Power of Attorney- GPA) மூலம் நிலப்பதிவை அனுமதிக்கக் கூடாது என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
- நிர்வகிக்க மட்டுமல்லாது அந்த நிலத்தின் விற்பனை உரிமையையும் பவர் பத்திரம் மூலம் ஒருவருக்கு எழுதிக்கொடுக்க முடியும்