சென்னை: மனித உரிமைகள் தினம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோமா. ஐ.நா. பொதுச்சபை 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் அனைத்துலக மனித உரிமைகள் என்கிற பிரகடனத்தை வெளியிட்டது.
சாதி, மதம், இனம், பால், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடுகாட்டி வேறுபடுத்தக் கூடாது.
தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும்.
இத்தினம் 1950ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள்.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.
மனித உரிமை மீறல் குறித்த புகார்களை அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைய வழி புகார் தெரிவிக்கும் முறை இணைக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் உடனடி சேவையைப் பெறுவதற்கு 14433 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை தினம்-2024-ன் முழக்கமாக “ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலமே, அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்“ மற்றும் கருப்பொருளாக “தாய் மற்றும் சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும் போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது“ என்ற நோக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதிமொழி எடுத்து கொள்வோம்.