சென்னை: அமைச்சரவை மாற்றத்திற்கு ஒப்புதல் கோரி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கவர்னர் இன்று இரவு சென்னை வரவுள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் கடிதம் குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார், அமைச்சரவையில் மொத்தம் 35 இடங்கள் உள்ளன. தற்போது, தமிழக அமைச்சரவை முழுவதும் நிரம்பியுள்ள நிலையில், புதிய அமைச்சரை சேர்க்க, ஏற்கனவே உள்ள ஒருவரை நீக்க வேண்டும். இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி வகிப்பார் என திமுக மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அது தொடர்பான எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது ஜாமீனில் வெளியில் இருப்பதால் அவருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய அமைச்சரவையில் 2 முதல் 3 பேர் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் வர வாய்ப்புள்ளது.பொன்முடியின் மாற்றம் மற்றும் அமைச்சர்கள் வெளியேறுவது குறித்து பிரபல பத்திரிகையாளர் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, கோவை செழியன், சேலம் ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோருக்கு புதிய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில், அமைச்சரவை மாற்றத்துக்கு தமிழக அரசு முழு அளவில் தயாராகிவிட்டது. இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுடன் இது நடக்கும்.
கவர்னர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததை தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஆளுநர் தற்போது மதுரையில் இருப்பதால், சென்னை வந்ததைத் தொடர்ந்து கடிதம் பரிசீலிக்கப்படும். இன்று இரவு அல்லது நாளை காலை முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கடிதத்தில் புதிய மற்றும் நீக்கப்பட்ட அமைச்சர்கள் விவரம், இலாகா மாற்றம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.