மதுரை: மதுரையில் பெண்கள் விடுதலை நடைபயணம் நடந்தது. இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, பெண்கள் அனைவரும் நமது பாரம்பரிய உடையான சேலையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் இன்று (ஆக.11) `விடுதலை நடைபயணம்’ விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இளங்குமரன், கோபாலகிருஷ்ணன் தலைமையிலான விழிப்புணர்வு நடைபயணத்தை முல்லை பெரியாறு கால்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் மார்நாடு கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து பெண்களுக்கான சேலை உலாவும், சிறுவர்களுக்கான மெல்லோட்டமும் நடைபெற்றது.
ஒத்தக்கடையில் இருந்து புறப்பட்டு நரசிங்கம் கோவில் வரை சென்று திரும்பினர். இதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 6 வயது முதல் 60 வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்தன் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.