தஞ்சாவூர்: வல்லம் பேரூர் திமுக சார்பில் தஞ்சை மேம்பாலம் இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் பேரூர் கழக செயலாளர் கல்யாணசுந்தரம் ஏற்பாட்டின் படி முதல்வர் பிறந்தநாளை ஒட்டி மேம்பாலம் இந்திய குழந்தைகள் நல சங்கத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் தலைமை வகித்து மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த சாமி, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வல்லம் பேரூர் அவை தலைவர் மாணிக்கம், மாவட்ட பிரதிநிகள் சிங்.அன்பழகன், மரு.சுந்தர்ராஜ், துணை செயலாளர் கோவிந்தராஜ் பொருளாளர் முகமது யூசுப், ஒன்றிய பிரதிநிதிகள் சுதாகரன், மனோகர் விவசாய அணி அழகர்சாமி, இளைஞர் அணி ஞானசேகர், தகவல் தொழில் நுட்ப அணி வெங்கடேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மணிராஜ், வார்டு செயலாளர்கள் ஜேம்ஸ் செல்வம், விஜயகுமார், ராஜேஷ், ஆறுமுகம், வினோத்குமார், இப்ராஹிம்,மனோகர், சாத்தையா, ரமேஷ் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.