தஞ்சாவூர்: தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான . ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் இவற்றை கடல் கடந்து மலேசியாவில் இருந்து வந்து கற்று வருகின்றனர் அந்நாட்டு கலைஞர்கள்.
மலேசியாவில் உள்ள சுபஸ்ரீ என்ற கலைக்கூடத்தில் 300 பேர் நாட்டுப்புற கலைகள் பயின்று வருகின்றனர்
இவர்களில் 8 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நாட்டுப்புற துறையில அளித்து வரும் பயிற்சி பட்டறையில் பங்கெடுத்து உள்ளனர். இவர்கள் மலேசியாவில் இருந்து பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம் கற்றுக் கொள்ள வந்து உள்ளனர்
மலேபியாவில் இந்த ஆட்டங்களை கலையாக பார்க்காமல் டான்சாக பார்க்கின்றனர் என வேதனையுடன் கூறிய பயிற்சி பெற வந்த மலேசியா மாணவி ஷாமினி இது பாரம்பரிய கலை என மலேசியாவில் தெரியவில்லை.
நாங்கள் முறைப்படி பயின்று மலேசியாவில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கற்று தர இருப்பதாக கூறினார். இந்த கலை அழியாமல் பாதுகாக்க ஒரு மணி நேரம் பள்ளியில் பாடமாக நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.