சென்னை: ராணுவத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட அதிகாரி ரஷ்மி சித்தார்த் ஜக்டே தெரிவித்துள்ளார். சென்னை மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் ராணுவத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு https://www.joinindianarmy.nic.in/default.aspx என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராணுவத்தில் சேர விருப்பம் உள்ள சென்னை மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு சென்னை மாவட்ட அதிகாரி ரஷ்மி சித்தார்த்தா ஜகடே தகவல் தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைத் தொடர்ந்து, பொது நுழைவுத் தேர்வு (சிஇஇ) ஆன்லைனில் நடத்தப்படும். ஆட்சேர்ப்பு விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.