சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சென்னையில் வரும் 14 மற்றும் 15-ம் தேதிக்கு பிறகு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். துணை முதல்வர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த மாதம் பெய்த மழையின் போது சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மோட்டார் தேவைப்படும் பகுதிகளில் மழைநீர் வடிகால்களுக்கு குழாய்கள் மூலம் தேங்கும் நீரை திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
முன்னதாக, தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழ்நாடு – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 11-ம் தேதி கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், சில இடங்களிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்.
12, 13, 14 ஆகிய தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.