சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி (72), பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அவர் மருத்துவமனைக்கு வந்ததும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
சில சோதனைகளுக்குப் பிறகு ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார்.
வழக்கமான பரிசோதனைக்காக கவர்னர் வந்ததாக மருத்துவமனை வட்டாரங்களில் தகவல் பரவியது.