சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளிலும் வளிமண்டலத்தில் மற்றொரு குறைந்த சுழற்சி நிலவுகிறது. அவற்றின் தாக்கம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடங்களிலும் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னல், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77-78.8 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும். இன்று தென் வங்கக் கடலின் வடக்குப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தெற்கு வங்கக் கடலின் வடக்குப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் 7 மற்றும் 8-ம் தேதிகளில், வடகிழக்கு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் அடையாமடை, கன்னியாகுமரி மாவட்டம், பில்லூர் அணைக்கட்டு பகுதிகளில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.