சென்னை: சென்னை மாரத்தான் போட்டி நாளை (5-ம் தேதி) நடக்கிறது. மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் பயன்பெறும் வகையில் நாளை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
மராத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் ‘க்யூஆர்’ குறியீட்டைக் கொண்ட சிறப்பு டிக்கெட்டைப் பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்யலாம் மற்றும் நாளை மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்யலாம். இதேபோல், பங்கேற்பாளர்கள் இந்த க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி வாகன நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.