சென்னை: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தால் செயற்கை கை, கால்கள் உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். நேற்று சட்டசபையில் சேலம் மேற்கு அருள் (பா.ம.க.) கூறியதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறை மூலம் செயற்கை கை, கால்கள் வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். இதற்கு பதிலளித்து சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை உறுப்புகள் கோரி விண்ணப்பிக்கும் பயனாளிகளின் விண்ணப்பங்கள் உடனடியாக அங்கீகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாகவும் செயற்கை கைகள், கால்கள் மற்றும் கால்கள் வழங்கப்படுகின்றன.
2022-23-ம் நிதியாண்டிலிருந்து 2024-25-ம் ஆண்டு வரை 3,969 நவீன செயற்கை உறுப்புகள் ரூ. 33 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரத்து 945 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயற்கை கால்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.