சென்னை: மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றிய 105 மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் M.சுப்பிரமணியன் விருதுகளை வழங்கினார். தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, 2019 முதல் 2024 வரை சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 105 சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் M.சுப்பிரமணியன், மதுரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன், மதுரை தோப்பூர் அரசு மார்பக மருத்துவமனையின் செயல் அலுவலர் ஓய்வுபெற்ற டாக்டர் காந்திமதிநாதன் உள்ளிட்ட 105 மருத்துவர்களை கவுரவித்தார்.
விழாவில் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். . அப்போது அமைச்சர் M.சுப்பிரமணியன் பேசியதாவது: ஆண்டுதோறும் 10 சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் மூன்றாண்டுகளாக விருதுகள் வழங்கவில்லை. 30 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கப்படவில்லை என்று சமீபத்தில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் மருத்துவர்கள் சிறப்பான பணியை செய்துள்ளனர். தி.மு.க., ஆட்சி அமைந்து மூன்றாண்டுகள் ஆனதில் இருந்து, ஆண்டுக்கு, 75 பேர் வீதம், 25 பேர், புதிதாக, 30 பேர் என, மொத்தம், 105 டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ரூ.3,000 கோடி திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதற்காக அமெரிக்கா செல்கிறேன். வரும் 10ம் தேதி வாஷிங்டனில் உலக வங்கி நிர்வாகிகளை சந்திக்க உள்ளோம். நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பற்றிய பேச்சாளர்களைத் தேடுகிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.