பெரம்பூர்: மருத்துவமனை ஆய்வகங்கள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டு நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா உட்பட பலர் உடனிருந்தனர். இதன் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள பெரியார் மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்த மறுநாளே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தில் 300 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. புதிய மருத்துவமனையில் 25-க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரிவுகள் செயல்படுகின்றன.

நரம்பியல், எலும்பியல் மற்றும் இருதயவியல் சிறப்புப் பிரிவுகளில் சோதனைகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு நாளைக்கு 125-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மார்பக பிரச்சனைக்காக வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் 639 பேர் பணிபுரிகின்றனர். சிறப்பு அம்சமாக, அதே அறுவை சிகிச்சை அரங்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரகத்தை அகற்றுதல் மற்றும் சிறுநீரகம் பொருத்துதல் ஆகிய இரண்டிற்கும் ஒரே ஆபரேஷன் தியேட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனை கார்ப்பரேட் அலுவலகம் போல் சுத்தமாக இருக்கிறது. நான் நேரடியாக வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் கேட்டபோது, அவர்கள் மகிழ்ச்சியடைந்து, தங்களை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள் என்றும், முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் கூறினார்கள். இதற்காக, முதல்வரை சந்தித்து, தொகுதி மக்கள் நன்றி தெரிவிப்பதாக, தெரிவிக்கிறேன். அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.