கடலூர்: கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனர். கனமழையால் கொட்டி தீர்த்த கடலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. பனிப்பொழிவு காரணமாக, எதிர்திசையில் இருந்து வருபவர்களை பார்க்க முடியாத அளவுக்கு சாலை மூடுபனி போல் காட்சியளித்தது.
கடும் குளிரால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. கொடைக்கானலில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது கனமழை பெய்து குளிர் கொளுத்தி வருகிறது.
இதனால் அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக கொடைக்கானலில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி மூட்டம் போன்ற மோசமான வானிலை நிலவும் நிலையிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.