சென்னை: கூட்டத்தை பயன்படுத்தி குழந்தைகயிடம் இருந்து நகை திருடிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக் கடையில் இரண்டரை வயது பெண் குழந்தையை கொஞ்சுவது போல நடித்து கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற 60 வயதுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புள்ள திருவெற்றியூரை சேர்ந்த ஜெயந்தியை பிடித்தனர்.
ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது பெற்றோரின் தலையாய கடமை என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.