
புதுடெல்லி: கேரளாவை சேர்ந்த மேத்யூ நெடும்பாரா உட்பட 5 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், கேரள மாநிலம் வயநாட்டில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பேரிடரை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
அதாவது முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்த அணை 50 ஆண்டுகள் ஆயுளுடன் கட்டப்பட்டது. ஆனால் தற்போது 129 ஆண்டுகள் ஆகிறது. இது அதன் ஆயுட்காலத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.