உதகை: நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடி மீட்புப் பணிகள் குறித்து அறிய சிறப்புக் குழு வயநாடு செல்கிறது.
நீலகிரியில் இருந்து சிறப்புக் குழு வயநாடு செல்ல உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை இரவு நேரங்களில் முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகாம்களை கண்காணிக்க 42 மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.