சென்னை: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை தென்மேற்கு பருவமழை காலமாகவும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாகவும் கருதப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.