தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியுள்ளது. தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை புதுச்சேரி-நெல்லூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. நாளை (அக்டோபர் 17) வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அக்டோபர் 17ம் தேதி பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையில் கரையை கடக்கும் போது மழையின் தாக்கம் குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலோர பகுதிகளில் வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் மழையும், பகலில் வெயிலும், இரவில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.