சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் பஸ்களை வாடகைக்கு இயக்கி வருகிறது.
இன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. இதன் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பயணிகள்: சென்னைக்கு வெளியே வசிப்பவர்கள் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதேபோல் தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை கிளாம்பாகத்தில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,028 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால், பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுதபூஜை பண்டிகை நாட்களில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய பகுதிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பயணிகள் கூட்டம் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாடகைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற தகவல், பிற ஊர்களுக்குச் சென்ற மற்ற பயணிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.