சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 17 அன்று கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 18 அன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்டம், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த தரைவழி காற்று வீச வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்டம், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸ் ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது சூறாவளியின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிமீ வரையிலும், மணிக்கு 65 கிமீ வரையிலும், மணிக்கு 60 கிமீ வரையிலும், மணிக்கு 40 முதல் 50 கிமீ வரையிலும், மணிக்கு 60 கிமீ வரையிலும், மணிக்கு 65 கிமீ வரையிலும், காற்று வீசக்கூடும்.