சென்னை: அரசு பஸ்களுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்குவதில் உரிய கவனம் செலுத்த போக்குவரத்து கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநர் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கு. பாலதண்டபாணி சமீபத்தில் ஆஜரானார்.
அவர் தனது வாதத்தில், ”பெரும்பாலான அரசு பஸ்கள் ரோட்டில் இயக்க தகுதியற்றவையாக உள்ளது. போக்குவரத்து துறையினர், பஸ்களை முறையாக ஆய்வு செய்யாமல், தகுதி சான்றிதழ் வழங்குகின்றனர். இத்தகைய நடவடிக்கை பொதுமக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது.
இது தொடர்பாக வீடியோ காட்சிகளை காட்ட தயாராக உள்ளேன்” என்றார். இதை பதிவு செய்த மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அத்தர், “ஓட்டுனர் தரும் தகவலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு, ரோட்டில் இயக்க தகுதியற்ற பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். “