கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா திருமங்கலக்குடியில் அமைந்துள்ள பிராணநாதர் உடனான மங்களாம்பிகை கோயில் பங்குனி உத்திர கொடியேற்று விழா நடைபெற்றது.
மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு கோயிலில் கொடியேற்றம் வைபவம் நடந்தது.
திருவாவடுதுறை ஆதீனம் 24 குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாசியுடன் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி தினமும் சாமி வீதியுலா உட்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.