சென்னை: எப்போது வேண்டுமானாலும் ஸ்டிரைக்கில் போக்குவரத்து ஊழியர்கள் இறங்கலாம் என்ற நிலை உள்ளதால் அச்சத்தில் பயணிகள் உள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 22 சங்க போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தனர். அதில், இன்று (பிப்.20) முதல் எப்போது வேண்டுமானாலும் ஸ்டிரைக் நடத்துவோம் என சில நாட்களுக்கு முன் கூறியிருந்தனர்.
இதனால் இன்று பேருந்துகள் இயங்குமா என்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர். மேலும் ஸ்டிரைக் நடக்காமல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.