கடலூர்: புரட்டாசி, தை, ஆடி மாத அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுப்பது வழக்கம். இந்நாளில் நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு.
இந்நிலையில் இன்று (அக்.2) புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி கடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் புனித நீராடி அர்ச்சகர்கள் முன்னிலையில் திரண்டு வந்து முன்னோர்களை வழிபட்டனர்.
இதேபோல் கடலூர் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆறு, விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.
இதேபோல் சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை குளத்தில் ஏரணமன்னர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.