மதுரை: மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
மனோ தங்கராஜை அமைச்சரவையில் இருந்து நீக்கியது முற்போக்காளர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. குமரி ஆர்.எஸ்.எஸ் மாதிரியை திராவிட மாடலுக்கு மாற்றியவர்.
மோடிக்கு எதிராக 108 கேள்விகள் என்ற புத்தகத்தை எழுதியவர். கூடங்குளத்தை எதிர்த்து போராடினார். ஆவின், கன்னியாகுமரி, விளவங்கோடு இடைத்தேர்தலிலும் ஊழலை ஒழித்தார், அவர் செய்த தவறு என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.
கன்னியாகுமரி நெல்லை பகுதியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அதானி துறைமுகத்திற்கு கடத்தப்படுவதை எதிர்த்து பெரும்பாலான குவாரிகளை மூட நடவடிக்கை எடுத்தார்.
பாஜக மற்றும் கனிமவளக் கொள்ளையர்களின் அழுத்தம் காரணமாக மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்க்கும், சிறுபான்மையினரின் பிரதிநிதியான அரசியல்வாதியை நீக்கி மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டம்மி ஆக்கப்பட்டார். தற்போது மனோ தங்கராஜ் நீக்கப்பட்டுள்ளார். தென்னகத்துக்கு டம்மி அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள்.
கொள்கைப்படி, முதல்வருக்கு நிதி உதவி எதுவும் கிடைக்கக்கூடாது என்று திமுக விரும்புகிறதா? முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகுதான் இப்படி நடப்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன?
மனோ தங்கராஜ் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நீக்கியது அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தேவையா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
பாஜகவுடன் திமுக நெருங்குகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இது குறித்து முற்போக்கு அமைப்பினர், கி.வீரமணி, திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் என அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும். மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்.
கொள்கை வகுப்பாளர்களை நீக்குவது குறித்து மூத்த அமைச்சர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இதன் மூலம் திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் காப்பாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.