நாகர்கோவில் : குமரி மாவட்ட வனத்துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு சிறப்பு புகைப்பட கண்காட்சி நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியை காண பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் காலை முதலே குவிந்தனர். இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் எடுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வன விலங்குகளின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து வனப் பாதுகாப்பு ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். மேலும் பலருக்கு அதன் அழகை அறிமுகப்படுத்தவும் உதவும். 500-க்கும் மேற்பட்ட வன விலங்குகளின் புகைப்படங்கள் உள்ளன.
இந்த விலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றன. கங்காரு போன்ற பல்லி என்று ஒரு உயிரினம் உள்ளது. இது மிகவும் அரிதான இனமாகும். இதேபோல், நீல-தாடை மற்றும் பஞ்ச-சுருதன் போன்ற உயிரினங்கள் உள்ளன. இவை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்வதில்லை. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையில் அவற்றை ஏராளமாக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த கண்காட்சி வரும் 4-ம் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.