தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள கல்லணை கால்வாய் பாலத்தில் எருக்கன் செடி உட்பட பல செடிகள் மண்டி பராமரிப்பின்றி உள்ளது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள வந்து செல்கின்றனர். அதே போல் அங்கு உள்ள மகாநந்திக்கு பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெறும்.
அதற்காக பக்தர்கள் ஆயிரம் கணக்கில் வந்து செல்வார்கள். இந்த நிலையில் பெரிய கோவில் அருகே உள்ள கல்லணை கால்வாய் பாலத்தில் இருபுறங்களிலும் அரச மரங்கள் மற்றும் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது. இந்த நிலையில் பெரிய கோவில் வருபவர்கள் அதனை பார்த்து முகம் சுளித்து செல்கின்றனர். எனவே அதனை மாவட்ட நிர்வாகம் சார்பாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.