கொடைக்கானல்: கொடைக்கானல் ஒரு சுற்றுலா நகரம். கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பும் இடங்களில் குப்பைகளை குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவது வழக்கமாகிவிட்டது.
கொடைக்கானல் அருகே சிட்டி வியூ வனப்பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொடைக்கானல் பள்ளி மாணவர்கள் மற்றும் சோலை குருவிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அகற்றினர். ஒவ்வொரு மாதமும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் சேர்ந்து காட்டை சுத்தம் செய்கிறார்கள்.
நேற்று சிட்டி வியூ வனப்பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்டு, அப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபாட்டில்களை அகற்றினர். தாங்கள் அகற்றும் கழிவுகளில் இருந்து அழகிய படங்களை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.