வால்பாறை: வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலின் தாக்கம் நிலவி வந்த நிலையில், பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதி முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைகள் மூடுபனியால் சூழப்பட்டு அழகாக இருக்கும்.

தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வால்பாறையில் பொழுதுபோக்கு அம்சமாக உள்ள பூங்கா மற்றும் படகு இல்லத்தில் கூட்டம் அலைமோதியது. கனமழை காரணமாக நேற்று முன்தினம் படகு சேவை நிறுத்தப்பட்டது.
நேற்று காலை வெயில் சுட்டெரித்ததால் படகு சேவை மீண்டும் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.