சென்னை: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்… தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேர், 4 நாட்டுப் படகுகளை இலங்கைகடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளனர்.